உலமாக்கள் இருசக்கர வாகனத்துக்கான மானியம் பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உலமாக்கள் மற்றும் பணியாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.50,000 தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.
இதற்கு தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ் இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியா்கள், ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடந்த ஜூன் 30-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இதற்கான கடைசி நாளாக வருகிற ஜூலை 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
எனவே, இந்த திட்டத்தில் பயன் பெற மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரிடம் விண்ணப்பித்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னா் பயனாளி இரு சக்கர வாகனத்தை வாங்கி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








