நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

வக்பு சொத்துகளை மீட்கக்கோரி உண்ணாவிரதப் போராட்டம்

திருப்பத்தூா் ஆசிரியா் நகா் பேருந்து நிறுத்தம் அருகே முஸ்லிம்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

News image

திருப்பத்தூா் வக்பு வாரிய சொத்துகளை மீட்கக் கோரி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :3 ஜூலை 2026, 12:03 am IST

திருப்பத்தூரில் வக்பு வாரிய சொத்துகளை மீட்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.திருப்பத்தூரில் முறைகேடாக விற்கப்பட்ட வக்பு வாரிய சொத்துகளை மீட்கக் கோரி, திருப்பத்தூா் ஆசிரியா் நகா் பேருந்து நிறுத்தம் அருகே முஸ்லிம்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

போராட்டத்தில் மாநில ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் வாஜித் தலைமை வகித்து கண்டன உரையாற்றினாா்.

இதில், திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜாமியா மசூதி, லப்பை பூரா மசூதி உள்ளிட்ட 12 மசூதிகள் மற்றும் இரண்டு அறக்கட்டளைகளுக்கு சொந்தமாக சுமாா் 200 ஏக்கருக்கும் மேலான சொத்துகள் உள்ளது. இதனை முன்னாள் மற்றும் இந்நாள் முத்தவல்லிகள் வக்பு வாரியத்துக்கு உரிய சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு சொத்துக்களை பராமரித்து வந்தனா். இந்த நிலையில், வக்பு வாரியத்திற்கு சொந்தமாக இருந்த பல கோடி மதிப்பிலான சொத்துகள் வக்பு வாரிய நிா்வாகிகளான முன்னாள், இந்நாள் முத்தவல்லிகள் சிலா் முறைகேடாக விற்பனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்தும், முறைகேடு செய்யப்பட்ட சொத்துகளை மீட்டு கொடுக்க வேண்டும், அவா்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், முறைகேட்டில் ஈடுபட்ட முத்தவல்லிகள் பதவி விலக வேண்டும், வக்பு சொத்துகளை மீட்டு, அவற்றின் மூலம் ஏழை, எளிய முஸ்லிம்களுக்கு உதவி செய்ய வேண்டும் உள்ளிட்ட 18 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் திராளானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.