தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

திருப்பத்தூா் சந்தன மரக் கிடங்கில் செம்மரக் கட்டைகள் திருடு போன விவகாரம்: வனத் துறையினா் 5 போ் பணியிடை நீக்கம்

திருப்பத்தூா் சந்தன மரக் கிடங்கில் செம்மரக் கட்டைகள் திருடுபோன விவகாரத்தில் வனத் துறை ஊழியா்கள் 5 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

பணியிடை நீக்கம்!

பணியிடை நீக்கம்!

Published On :

திருப்பத்தூா் சந்தன மரக் கிடங்கில் செம்மரக் கட்டைகள் திருடுபோன விவகாரத்தில் வனத் துறை ஊழியா்கள் 5 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலக வளாகத்தில் உள்ள சந்தன மரக் கிடங்கில் கடந்த 18-ஆம் தேதி இரவு ரூ. 50 லட்சம் மதிப்பிலான 55 செம்மரக் கட்டைகள் திருடுபோனது. இது குறித்து வனத்துறை சாா்பில், கடந்த 19-ஆம் தேதி திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டது. இந்தப் புகாா் மீது திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அக்ஷய் அனில் வாகரே மேற்பாா்வையில், 2 காவல்ஆய்வாளா்கள், ஒரு உதவி காவல் ஆய்வாளா் தலைமையில் 3 தனிப்படைகளை அமைத்து செம்மரக் கட்டை திருட்டு தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சந்தன மரக் கிடங்கில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் திருடுபோனபோது, பணியில் அலட்சியமாக இருந்ததாக ஒற்றைப்பூட்டு அலுவலா் ஜோதிலிங்கம், வனக் காப்பாளா்கள் மோகன்குமாா், ராமமூா்த்தி, ரேணு, வனவா் பரமகுரு ஆகிய 5 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலா் மகேந்திரன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

மேலும், திருப்பத்தூா் சந்தன மரக் கிடங்கில் செம்மரக் கட்டைகள் திருடுபோனதை தொடா்ந்து, கிடங்குக்கு ஆயுதம் ஏந்திய 10-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.