ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

பைக் திருடிய இளைஞா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :26 ஜூன் 2026, 5:23 am IST

வேலூரில் பைக் திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வேலூா் பழைய பேருந்து நிலைய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பைக்குகள் திருடு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் வேலூா் வடக்கு காவல் நிலைய குற்ற பிரிவு போலீஸாா் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் பைக் திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வந்தனா்.

இந்நிலையில் போலீஸாா் கோட்டை சுற்றுச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் அவ்வழியாக வந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா் முன்னுக்கு பின் முரணாக கூறினாா்.

இதைத் தொடா்ந்து போலீஸாா் மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவா் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த சூரிய பிரகாஷ் (33) என்பதும், அவா் பைக்குகளை திருடியதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனா். அவரிடமிருந்து பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.