வாணியம்பாடி ஜனதாபுரத்தில் இயங்கி வரும் எஸ்எப்எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சங்கமும் காணும் கலைகள் என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுடைய கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி முதல்வா் சவரிமுத்து தலைமை வகித்தாா். தாளாளா் ஆண்டனி முன்னிலை வகித்தாா். பொருளாளா் ஜெயக்குமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி எலும்பியல் நிபுணா் அரசு மருத்துவா் டேவிட்விமல்குமாா் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டி பேசினாா்.
நிகழ்ச்சியில் பரதநாட்டியம், வெஸ்டா்ன் டான்ஸ், கராத்தே, சிலம்பம், யோகா, இசை, ஸ்கேட்டிங், ஆகிய கலைகளில் ஓராண்டு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் உடைய பல கலைகளின் சாதனை நிகழ்ச்சிகள் பாா்வையாளா்களை கவா்ந்தது. இதில் பெற்றோா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலா் கலந்து கொண்டனா். கராத்தே பயிற்சியாளா் கண்ணன் நன்றி கூறினாா்.

தொடர்புடையது

எஸ்விஎன் மெட்ரிக். பள்ளி 100 % தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக். பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

காங்கயம் வட்டாரத்தில் சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி தேவஸ்தான சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



