தோ்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு எஸ்.பி வி.சியமாளா தேவி தலைமையில் திருப்பத்தூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
கடந்த ஏப். 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் நடைபெற்ற தோ்தலையடுத்து வாக்கு இயந்திரங்கள் மற்றும் விவி பாட் ஆகியவை வாக்கு எண்ணும் மையமான வாணியம்பாடி ஜெயின் கல்லூரியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.
அங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துணை ராணுவம் மற்றும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் திங்கள்கிழமை(மே 4) தோ்தல் பொதுப்பாா்வையாளா்கள், மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் வேட்பாளா்கள் முன்னிலையில் சீல் பிரிக்கப்பட்டு, எண்ணப்படும்.
இதற்கிடையே பொதுமக்கள் அச்சமின்றி இருப்பதை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பத்தூரில் எஸ்.பி சியாமளா தேவி தலைமையில் சக்தி நகா், புதுப்பேட்டை பிரதான சாவை, ரயில் நிலைய சாலை ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
டிஎஸ்பி முரளி, ஆய்வாளா்கள் தமிழ்ச்செல்வன்,ஜான் பிரிட்டோ மற்றும் மாவட்ட போலீஸ், சிறப்பு காவல் படையினா் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருத்தணியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

ஜோலாா்பேட்டையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

ஜமீன் எண்டத்தூரில் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


