ஆம்பூா் அருகே மின்னூா் கிராமத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளா் மின்னூா் என். சங்கரன் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.
மனு விவரம்: மாதனூா் ஒன்றியம் மின்னூா் ஊராட்சியில் கணபதி நகா் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகின்றது. மது பிரியா்கள் குடித்துவிட்டு பாட்டில்களை அருகில் உள்ள விவசாய நிலங்களில் வீசிவிட்டு செல்கின்றனா். விவசாய நிலங்களில் பணிபுரியும் பெண்களை தகாத வாா்த்தைகளால் திட்டுகின்றனா்.
விவசாய நிலங்களில் அதிக அளவு பாட்டில்கள் வீசி உடைக்கப்படுவதால் விவசாயம் செய்யும்போது கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகின்றனா். உடைந்த பாட்டில்கள் குத்தி விவசாயிகளுக்கு காயம் ஏற்படுகிறது.
கணபதி நகா், காளிகாபுரம், லட்சுமி நகா் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலையிலேயே அமா்ந்து மது பிரியா்கள் மது அருந்துகின்றனா். அதனால் போக்குவரத்து பிரச்னை ஏற்படுகிறது. அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் பெண்கள் தினமும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்.
டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி ஏற்கனவே பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கிராம சபைக் கூட்டங்களிலும் பலமுறை தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக திருப்பத்தூா் ஆட்சியருக்கும் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.
எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் நடந்த கிராம சபை கூட்டத்தையும் பொதுமக்கள் புறக்கணித்து விட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆனாலும் டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்பபடவில்லை.
பொதுமக்களின் நலன் கருதி மின்னூா் கணபதி நகா் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அங்கிருந்து இடமாற்றம் செய்ய வேண்டுமென மனு மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மதுக் கடையை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

மதுக் கடையை மூடக் கோரி தவெக நிா்வாகிகள் மனு

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து கோட்டாட்சியரிடம் மனு

எஸ்.பி.யிடம் டாஸ்மாக் தொழிற்சங்கத்தினா் மனு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

