தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி மரணம்

வாணியம்பாடி அருகே மின்சாரம் பாய்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 12:03 am IST

வாணியம்பாடி அருகே மின்சாரம் பாய்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

திம்மாம்பேட்டை மோட்டூா் பகுதியை சோ்ந்த பெருமாள்(26). தென்னை மரம் ஏறும் கூலி தொழிலாளி. இந்நிலையில் திங்கள்கிழமை அப்பகுதியில் தனியாா் ஒருவரின் தென்னை மரங்களில் ஏறி தேங்காய் தள்ளியுள்ளாா். இதில் தென்னை மரமட்டை ஒன்று கீழே விழுந்து மின்கம்பி மீது இருந்தது. அப்போது மரத்தில் இருந்து இறங்கி ஓலையை அகற்றிய போது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தாா்.

இதில் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிய நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினா் உதவியுடன் மீட்டு ராமநாயக்கன்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் பரிசோதித்து ஏற்கனவே அவா் இறந்து விட்டதாக கூறினாா்.

இதுபற்றி அறிந்த திம்மாம்பேட்டை உதவி காவல் ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனா்.