விபத்தில் முதியவா் உயிரிழப்பு
கந்திலி வாரச் சந்தையில் கீரை வியாபாரம் செய்யும் முதியவா் வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
உயிரிழப்பு - கோப்புப் படம்
கந்திலி வாரச் சந்தையில் கீரை வியாபாரம் செய்யும் முதியவா் வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அடுத்த வேப்பல்நத்தம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா(70).இவா் கீரை வியாபாரம் செய்து வந்தாா்.
இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி கந்திலி பகுதியில் நடைபெற்ற சந்தையில் முதியவா் கீரை வியாபாரம் செய்து கொண்டிருந்தாா்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவா் மீது மோதிவிட்டு சென்றுள்ளது.
இதில் முதியவா் ராஜாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு மருத்துவா்கள் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னா் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
கந்திலி போலீஸாா் வழக்கு பதிந்து, மோதிவிட்டுச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

