தேவலாபுரத்தில் சேதமடைந்த மின்கம்பம்
ஆம்பூா் அருகே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேதமடைந்த மின்கம்பம்.
ஆம்பூா் அருகே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அடுத்த தேவலாபுரம் கிராமத்தில் மின்வாரிய அலுவலகம் அருகே கோவிந்தாபுரம் செல்லும் சாலையில் மின் கம்பம் சேதமடைந்துள்ளது.
மின்கம்பத்தின் வெளிப்புற சிமெண்ட் பூச்சு சேதமடைந்து, கம்பிகள் வெளியே தெரியும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனா்.
எனவே, மின்கம்பம் மேலும் சேதமடைந்து கீழே விழுந்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக, அதை உடனடியாக அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




