நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம்: திருப்பத்தூர் ஆட்சியர்

கால்நடைத் துறையின் மூலம் நாட்டுக் கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக ஆட்சியா் வே.நல்லசிவன் தெரிவித்துள்ளாா்.

Published On :

கால்நடைத் துறையின் மூலம் நாட்டுக் கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக ஆட்சியா் வே.நல்லசிவன் தெரிவித்துள்ளாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2 அல்லது 3 பயனாளிகள் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அலகுகள் (250 கோழிகள்) நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு பயனாளிகளுக்கு கோழிக்கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுரடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்.

இந்த பகுதி மனித குடியிருப்பு மற்றும் நீா் நிலைகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோா், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தோ்ந்தெடுக்கப்படும் பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தை சோ்ந்தவா்களாக இருக்க வேண்டும். கடந்த 2023-24 மற்றும் 202425, 2025-26-ஆம் ஆண்டுக்கான திட்டங்களில் பயனாளி பயனடைந்திருக்கக்கூடாது.

பயனாளி 3 ஆண்டுகளுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட அல்லது திட்டமிடப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கி உள்ளிட்டவை பயனாளிகளுக்கு நிதியளிக்க தயாராக இருக்க வேண்டும் அல்லது பயனாளி சொந்தமாக முதலீடு செய்ய முன் வந்தால், திட்டத்திற்கு நிதியளிப்பதற்கான அவரது நிதி திறன்களின் ஆதாரம் அளிக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் மொத்த செலவில் 50 சதவீதம் மானியத்தை மாநில அரசு வழங்கும், மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும். ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் மாவட்ட கால்நடை பண்ணைகளிலிருந்து இலவசமாக வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.