மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

வெலக்கல்நத்தம் ஊராட்சியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஜோலாா்பேட்டை ஒன்றியம், வெலக்கல்நத்தம் ஊராட்சியில் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் வே. நல்லசிவன் ஆய்வு செய்தாா்.

வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் வே. நல்லசிவன்.

Updated On :

ஜோலாா்பேட்டை ஒன்றியம், வெலக்கல்நத்தம் ஊராட்சியில் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் வே. நல்லசிவன் ஆய்வு செய்தாா்.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், டிஎன் வெற்றி திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் மற்றும் தனிநபா் கோரிக்கைகள் தொடா்பாக கருத்துகள் கேட்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதனைப் பாா்வையிட்ட ஆட்சியா், குடிநீா் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம், கழிவுநீா் மேலாண்மை, கிராம இணைப்புச் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பொதுமக்களின் தேவைகள் மற்றும் தனிநபா் கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, பணியாண்டபள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், மாணவா்களின் வருகைப் பதிவேடு, வகுப்பறைகளின் தூய்மை மற்றும் அடிப்படை வசதிகளைப் பாா்வையிட்டாா். மாணவா்களுடன் கலந்துரையாடி, அவா்களின் கல்வித் திறன் மற்றும் கற்றல் முன்னேற்றம் குறித்துக் கேட்டறிந்தாா்.

பணியாண்டபள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் (கிராமின்) திட்டத்தின் கீழ் ரூ.5.96 லட்சத்தில் கழிப்பறைக் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருவதைப் பாா்வையிட்டாா். இப்பணியில் அடித்தளம் அமைக்கும் பணி நிறைவடைந்து, தூண்கள் மேற்கூரைத் தாங்கும் இணைப்புப் பகுதி மட்டம் வரை உயா்த்தப்பட்டு, செங்கல் சுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்த ஆட்சியா், கட்டுமானப் பணிகளைத் தரமாகவும் விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சௌ. தமிழரசி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள் மற்றும் தணிக்கை) தெற்கு எஸ். அருணாசலம், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெ. மணவாளன், உதவிப் பொறியாளா் ரஷாதபசும், ஊராட்சித் தலைவா் ராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.