
3 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்
தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, திருவள்ளூர் மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற 3,06,700 மரக்கன்றுகள் நடும் திட்டம் சனிக்கிழமை தொடங்கியது.
தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, திருவள்ளூர் மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற 3,06,700 மரக்கன்றுகள் நடும் திட்டம் சனிக்கிழமை தொடங்கியது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்த தொலைநோக்குப் பார்வை 2023-இன் படி, திருவள்ளூர் மாவட்டத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்களுடன் இணைந்து 10 லட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளர்களாக பால்வளத் துறை அமைச்சர் பி.வி.ரமணா, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், மக்களவை உறுப்பினர் பி.வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 2,85,700 மரக்கன்றுகளும், 10 பேரூராட்சிகளில் 10,000 மரக்கன்றுகளும், 5 நகராட்சிகளில் 11,000 மரக்கன்றுகளும் என மாவட்டம் முழுவதும் உள்ள பூங்கா, குளக்கரை, சாலையோரங்கள், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் என மொத்தம் 3,06,700 மரக்கன்றுகள் மாவட்டம் முழுவதும் நடப்பட்டன.
நிகழ்ச்சிக்குத் தேவையான மரக்கன்றுகள், தோட்டக்கலைத் துறை பராமரிக்கும் மாதவரம், காஞ்சிபுரம் நாற்றங்கால் பண்ணைகளிலிருந்தும், திருவள்ளூர் வனத் துறையின் கீழ் பராமரிக்கப்படும் நாற்றங்கால் பண்ணையிலிருந்தும் பெறப்பட்டன.
இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சா.குமார், துணை ஆட்சியர் ராகுல்நாத், மகளிர் மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் வீரணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள் 1,60,382 பேர், மகளிர் சுய உதவிக் குழுவினர் 46,987 பேர், பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 16,915 மாணவர்களும், 3,149 பொதுமக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் என 2,33,721 பேர் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டியில்...
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 53 ஊராட்சிகளில் 40,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சனிக்கிழமை தொடங்கியது.
கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழுத் தலைவர் குணம்மா கோபல் நாயுடு தலைமை வகித்து மரக்கன்று நட்டு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் நாகலட்சுமி ஸ்ரீதர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரபாபு, லதா, அலுவலக மேலாளர் காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கோபி, சுரேஷ்ராஜீ, இமாச்சலம், தேசமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 33 மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஈகுவார்பாளையம் ஊராட்சியில் 1,400 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் தொடக்கி வைத்தார். ரெட்டம்பேடு ஊராட்சியில் 800 மரக்கன்றுகள் நடும் பணியை தலைவர் கே.ஆர்.கே.முரளியும், பாத்தப்பாளையம் ஊராட்சியில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணியை தலைவர் ஜி.சேகரும், பல்லவாடா ஊராட்சியில் 800 மரக்கன்றுகள் நடும் விழாவை தலைவர் ரமேஷ்குமாரும், பெரியபுலியூரில் 1,000 மரக்கன்றுகள் நடும் விழாவை தலைவர் ஷியாமளா தன்ராஜும், கண்ணம்பாக்கத்தில் 580 மரக்கன்றுகள் நடும் விழாவை தலைவர் சதீஷும், கீழ்முதலம்பேட்டில் 647 மரக்கன்றுகள் நடும் விழாவை தலைவர் இந்திரா திருமலையும் தொடக்கி வைத்தனர். இதேபோல், 53 ஊராட்சிகளிலும் 40,000 மரக்கன்றுகள் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர்களால் தொடக்கி வைக்கப்பட்டது.
திருத்தணியில்...
திருத்தணியில் நடைபெற்ற விழாவுக்கு ஒன்றியக் குழுத் தலைவர் இ.என்.கண்டிகை எ.ரவி தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டார்.
பள்ளிப்பட்டில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் டிடி.சீனிவாசன், ஒன்றியக் குழுத் தலைவர் சாந்திபிரியா சுரேஷ் ஆகியோர் தலைமை வகித்து மரக்கன்றுகள் நட்டனர்.
நிகழ்ச்சிகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுவாமிநாதன், ஷேக் சதக்கத்துல்லா, ஒன்றியப் பொறியாளர் சீனிவாசன், பொறியாளர்கள் ரவிச்சந்திரன், தர்மேஷ், ஒன்றியக் குழு உறுப்பினர் கண்ணையா, செல்வி சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பொதட்டூர்பேட்டை பேரூராட்சி முழுவதும் 1,000 மரக்கன்றுகள் நடும் விழாவை பேரூராட்சி செயல் அலுவலர் தேவராஜன் தொடக்கி வைத்தார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டனர்.
பள்ளிப்பட்டு பேரூராட்சியில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவை பேரூராட்சித் தலைவர் சித்ரா சிவகுமார் தொடக்கி வைத்தார். செயல் அலுவலர் கலாதரன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி முழுவதும் 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.இளங்கோவன் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டார்.
ஊத்துக்கோட்டையில்...
ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 1,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பேரூராட்சித் தலைவர் பத்மாவதி தலைமை வகித்து மரக்கன்றை நட்டு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜமாணிக்கம், செயல் அலுவலர் மா.பாஸ்கரன், துணைத் தலைவர் ஷேக்தாவூத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






