
அயப்பாக்கத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
அயப்பாக்கத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை நீதிமன்ற உத்தரவுப்படி வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனர்.
அயப்பாக்கத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை நீதிமன்ற உத்தரவுப்படி வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனர்.
அயப்பாக்கத்தில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டபோது கோலடி சாலையில் வணிக வளாகத்துக்கு சுமார் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
இந்த இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கடைகள், வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்து வந்துள்ளார். மீதமுள்ள காலி இடத்தை வீட்டு மனைகளாகப் பிரித்து விற்பனைக்கு விளம்பரம் செய்து இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வீட்டு வசதிவாரியம் சார்பில் மணி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை வீட்டுவசதி வாரியத்தின் செயற்பொறியாளர் கண்ணன் தலைமையில் சென்ற ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புக் கட்டடங்களை இடித்து, 2 ஏக்கர் நிலத்தை மீட்டனர். இதன் தற்போதைய மதிப்பு சுமார் 10 கோடி ரூபாயாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





