வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இன்று அதிமுக மே தினப் பொதுக்கூட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை (மே 1) நடைபெறும் மே தின விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 9:26 pm

DIN

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை (மே 1) நடைபெறும் மே தின விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். 
அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை (மே 1) மாலை 6 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றவுள்ளார். இக்கூட்டத்தில், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் உள்ளிட்ட அமைச்சர்களும், மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர். 
இதில், அனைத்து மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றியம், நகரம், பேரூராட்சி, வட்டக் கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு அதிமுக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.