தத்தெடுத்த கிராமத்துக்கு முதன் முறையாக கமல் இன்று வருகை
திருவள்ளூர் அருகே, தான் தத்தெடுத்த கிராமமான அதிகத்தூரில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் முதன் முறையாக பங்கேற்க மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை


திருவள்ளூர் அருகே, தான் தத்தெடுத்த கிராமமான அதிகத்தூரில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் முதன் முறையாக பங்கேற்க மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை (மே 1) வருகை தர உள்ளார்.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது அதிகத்தூர் கிராமம். இந்தக் கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளப்போவதாக சில மாதங்கள் முன்பு கமல்ஹாசன் அறிவித்தார்.
அதன் பின்னர், முதன் முதலாக இக்கிராமத்திற்கு செவ்வாய்க்கிழமை (மே 1) வருகை தரவிருக்கும் கமல், அங்கு மே தினத்தையொட்டி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பார்வையாளராக கலந்து கொள்ள இருக்கிறா.
முன்னதாக, தங்கள் கிராமத்திற்கு முதல் முதலாக வருகை தர இருக்கும் கமல் ஹாசனுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர். அதோடு, இக்கிராமம் கமல் ஹாசன் வருகையால் மென்மேலும் வளர்ச்சி அடையும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...