சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

ஓய்வு பெற்ற ஆசிரியருக்குப் பாராட்டு

கும்மிடிப்பூண்டியை அடுத்த நாயுடுகுப்பம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜேந்திரனுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST


கும்மிடிப்பூண்டியை அடுத்த நாயுடுகுப்பம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜேந்திரனுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.புஷ்பலதா தலைமை வகித்தார். கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால்நாயுடு பள்ளிக்கு ஒலி பெருக்கிக் கருவிகளை வழங்கினார். மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, இப்பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜேந்திரனுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய நிர்வாகி டி.சி.மகேந்திரன், ஊராட்சி முன்னாள் தலைவர் ரகு, தலைமை ஆசிரியர்கள் கே.மெடில்டா (மாநெல்லூர்), எம்.சுகாஷினி (ஜி.ஆர்.கண்டிகை), ஒன்றியக் கல்வி அலுவலர்கள் முனிராஜசேகர், பூவராகமூர்த்தி ஆகியோர் ஆசிரியர் ராஜேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், பள்ளி சார்பில் ஆசிரியர் ராஜேந்திரனுக்கு தங்க மோதிரம், கைக் கடிகாரம் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டன. ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜேந்திரன் ஏற்புரை வழங்கினார். பள்ளி உதவி ஆசிரியர் பி.சி.கிருஷ்ண மோகன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.