தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

இம்மாத இறுதிக்குள் ஆய்வுப் பணியை முடிக்க வேண்டும்: வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வலியுறுத்தல் 

திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் ஜன.5-இல் வாக்காளர் பட்டியல் வெளியிட இருப்பதால், இம்மாத இறுதிக்குள் தொகுதி வாரியாக வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட படிவங்களை

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST


திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் ஜன.5-இல் வாக்காளர் பட்டியல் வெளியிட இருப்பதால், இம்மாத இறுதிக்குள் தொகுதி வாரியாக வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட படிவங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என வாக்கு பதிவு அலுவலர்களை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் மாநில திட்ட ஆணைய உறுப்பினர் அனில் மேஷ்ராம் வலியுறுத்தினார். 
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்தார். 
இதில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர், மாநில திட்ட ஆணைய உறுப்பினர் செயலர் அனில் மேஷ்ராம் பங்கேற்று ஆய்வு செய்தார். அப்போது, அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 1.9.2018 முதல் பெறப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் முதலான விண்ணப்பங்களையும், இணையவழி மூலமாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் பேசியது: இம்மாவட்டத்தில் நடைபெற்ற முகாமில், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில், கடந்த செப்.1-ஆம் தேதிக்கு பின்னர் 80,921 விண்ணப்பங்கள் பெயர் சேர்த்தலுக்காகவும், 1,505 விண்ணப்பங்களை நீக்கம் செய்யவும், 11,275 விண்ணப்பங்கள் திருத்தம் செய்யவும், முகவரி மாற்றம் செய்வதற்காக 6,670 விண்ணப்பங்களும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டிருந்தன.
அதேபோல், இம்முகாமில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 11 பேர் விண்ணப்பம் அளித்திருந்தனர். 
இதற்கிடையே வரும் ஜனவரி 5-இல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இதற்காக தொகுதி வாரியாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர் வாக்காளர்களிடம் பெறப்பட்ட விண்ணப்பப் படிவங்களின் அடிப்படையில் விரைவாக நேரில் களப்பணி செய்து வாக்காளர்களின் விவரம் சரியா என இம்மாத இறுதிக்குள் ஆய்வு செய்து முடிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் உயிரிழந்தவர்களின் பெயர், ஒரு பெயர் இருமுறை வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். 
இந்த ஆய்வுக் கூட்டத்தில், திருவள்ளூர் சார் ஆட்சியர் டி.ரத்னா, கோட்டாட்சியர்கள் ஏ.நந்தகுமார் (பொன்னேரி), பவணந்தி (திருத்தணி), சரண்யா (அம்பத்தூர்) மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.