வேலை கேட்டு தொழிலாளர்கள் போராட்டம்

மீஞ்சூர் அருகே , பணியில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்கள் திங்கள்கிழமை வேலை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
Published on

மீஞ்சூர் அருகே , பணியில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்கள் திங்கள்கிழமை வேலை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மீஞ்சூர் அருகே வல்லூர் பகுதியில் தனியார் கண்டெய்னர் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் 29 பேர் ஊதிய உயர்வு கேட்ட காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 
இதையடுத்து பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வலியுறுத்தி, சிஐடியூ தொழிற்சங்கத்தினர் தனியார் நிறுவன கண்டெய்னர் கிடங்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
நிகழ்விடத்துக்கு வந்த மீஞ்சூர் போலீஸார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து தொழிலாளர்கள், சாலையில் அமர்ந்து, மீண்டும் வேலை வழங்கக் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com