எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

திருத்தணியில் இருந்து பெங்களூருக்கு அரசுப் பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருத்தணியிலிருந்து பெங்களூருக்கு அரசுப் பேருந்து சேவையை எம்எல்ஏ பி.எம். நரசிம்மன் தொடங்கி வைத்தார்.

Updated On :24 ஜூலை 2018, 12:41 am IST

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருத்தணியிலிருந்து பெங்களூருக்கு அரசுப் பேருந்து சேவையை எம்எல்ஏ பி.எம். நரசிம்மன் தொடங்கி வைத்தார்.
திருத்தணி பகுதியிலிருந்து தோட்ட நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர். இருப்பினும் திருத்தணி - பெங்களூர் இடையில் போதுமான பேருந்து வசதிகள் இல்லாததால் அவர்கள் அவதிப்பட்டு வந்தனர். போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில் இந்த இரு நகரங்களுக்கு இடையில் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, திருத்தணி - பெங்களூர் இடையிலான போக்குவரத்து சேவை திங்கள்
கிழமை தொடங்கியது. திருத்தணி பேருந்து நிலையத்திலிருந்து  பெங்களூருக்கு புறப்பட்ட அரசுப் பேருந்தை எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில், போக்குவரத்து துறை திருவள்ளூர் மண்டலப் பொது மேலாளர் இளங்கோவன், திருத்தணி போக்குவரத்து பணிமனை மேலாளர் முருகன், சோளிங்கர் பணிமனை மேலாளர் ரமேஷ், காஞ்சி மண்டல அண்ணா தொழிற்சங்கத் தலைவர் வெங்கடபதி, இணைச் செயலாளர் செல்வராஜ், முன்னாள் திருவள்ளூர் மாவட்ட ஆவின் பால் நிறுவனத் தலைவர் வேலஞ்சேரி த.சந்திரன், ஆவின் முன்னாள் இயக்குநர் ஏ.பி.சந்திரன், நகர அவைத் தலைவர் குப்புசாமி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பாண்டுரங்கன், ஸ்டுடியோ அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.