பொன்னேரி-புதுவாயல் - பழவேற்காடு-சின்ன காவனம் கூட்டுச்சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளும்போது, கிராமத்தில் உள்ள குடியிருப்புகளை பாதிக்காமல் மாற்றுப் பாதையில் செயல்படுத்துமாறு சின்ன காவனம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சின்ன காவனம் பொதுமக்கள் சார்பில் கிராம சீரமைப்பு சங்கத்தின் செயலாளர் கார்த்திக் தலைமையில் ஆட்சியர் எ.சுந்தரவல்லியிடம் திங்கள்கிழமை நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி -புதுவாயல், பழவேற்காடு, சின்னகாவனம் கூட்டுச் சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வதற்காக வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறையினர் நில அளவு எடுத்து வருகின்றனர். இப்பணிகளால், சின்ன காவனம் கூட்டுச் சாலை, புதுவாயல் சாலையில் உள்ள வேணுகோபால் தெரு, கோவில் மாடவீதியில் உள்ள கடைகள் மற்றும் குடியிருப்புகள், பெரியகாவனம் கிராமத்தில் உள்ள 150 க்கும் மேற்பட்ட வீடுகள் அனைத்தும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.
இதில் ஏற்கெனவே 25 அடி சாலை உள்ள நிலையில், இருபுறமும் தலா 15 அடி வரையில் நிலம் எடுப்பதற்கு அளவீடு செய்துள்ளனர். இதனால், சின்னகாவனம் கிராமத்தில் உள்ள பழமையான நூற்றியெட்டு ஈஸ்வரன் கோயில், அருட்பெருஞ்சோதி வள்ளலாரின் தாயார் சின்னம்மையார் இல்லம் மற்றும் தியானபீடம் ஆகியவை பாதிக்கப்படும். இங்குள்ள கோயில்கள், குடியிருப்புகள் அனைத்தும் இடிக்கப்படுவதன் மூலம் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.
இதைக் கருத்திற்கொண்டு அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்கள் வழியாக சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக ஆட்சியர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வங்கதேசத்தில் ஹிந்துக்களின் வீடுகள், கடைகள் மீது தாக்குதல்!
பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி!
இராக் அதிபராக நிஸார் அமிதி தேர்வு!

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

