திருத்தணி பணிமனையில் இருந்து தீபாவளிக்கு 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுவருவதாக போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும், செவ்வாய்க்கிழமை (நவம்பர் 6-ஆம் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாட ப்படுகிறது.
தமிழக அரசு தீபாவளிக்கு முதல் நாள் திங்கள்கிழமையும் பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. இதனால், தொடர்ச்சியாக நான்கு நாள்கள் விடுமுறை வருவதால், வெளியூர் பயணிகள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று தீபாவளி கொண்டாட வசதியாக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருத்தணி போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து தீபாவளி பண்டிகையை ஒட்டி சனிக்கிழமை மாலை முதல், நவம்பர் 11-ஆம் தேதி வரையில் 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து திருத்தணி போக்குவரத்துக் பணிமனை அலுவலர் ஒருவர் கூறும்போது, தீபாவளிப் பண்டிகைக்கு, அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவரும் வசதிக்காக, திருத்தணி பணிமனையில் இருந்து, திண்டிவனம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட தென்பகுதிகளுக்குச் செல்வதற்கு வசதியாக 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுகிறது. இவை சனிக்கிழமை முதல் தொடங்கி, நவம்பர் 11-ஆம் தேதி வரையில் இயக்கப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூன் 25: தொடர்ந்து 3-வது நாளாகக் குறைந்த தங்கம் விலை! இன்று எவ்வளவு?

பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்! ஆட்டோ, ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!

சட்டப்பேரவை மரபை மீறவில்லை! திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனா

ஐரோப்பாவில் கடும் வெய்யில்! பிரான்ஸில் 40 பேர் பலி!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


