மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

லாரி மீது வேன் மோதியதில் பெண்கள் உள்பட10 பேர் காயம்

திருவள்ளூரில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் பிடித்த காரணத்தால், பின்னால் மீன் ஏற்றி வந்த வாகனம் மோதியதில் மீன்

News image

 விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்கள்.

Updated On :3 செப்டம்பர் 2018, 9:39 pm


திருவள்ளூரில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் பிடித்த காரணத்தால், பின்னால் மீன் ஏற்றி வந்த வாகனம் மோதியதில் மீன் வியாபாரிகளான 9 பெண்கள் உள்பட 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த மீன் வியாபாரிகள் நாள்தோறும் சென்னைக்கு சென்று மீன்கள் வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர். 
இந்த நிலையில் வழக்கம் போல் 10 மீன் வியாபாரிகள் சென்னை காசி மேடு பகுதியில் மீன் வாங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றனர். இந்த வாகனத்தை தெக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்(25) ஓட்டிச் சென்றார். அங்கிருந்து திங்கள்கிழமை அதிகாலையில் மீன்கள் வாங்கிக் கொண்டு வேனில் திருத்தணி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். 
அப்போது, முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்ததால், பின்னால் வந்த வேன் மோதியது. 
இதில், வேனில் வந்த தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல்(55), கோவிந்தம்மாள்(35), எல்லம்மாள்(45), தனலட்சுமி(40), முனியம்மாள்(32), சரசம்மாள்(50), அஸ்வினி(30), லலிதா(30), ரோசா(35), மற்றொரு லலிதா(40) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் நகர போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேன் ஓட்டுநர் ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸார் லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.