தலைக்கவசம் அணிவது குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து மாவட்ட எஸ்.பி. பொன்னி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிவோம் என உறுதிமொழி ஏற்றனர்.
இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக தலைக்கவசம் அணியவேண்டும் என்ற அரசின் உத்தரவிற்குப் பிறகு காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. பொன்னி பங்கேற்று இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக் கவசம் அணிவதன் அவசியத்தையும், தலைக்கவசம் அணியாததால் ஏற்படும் விபத்துகள் மற்றும் விளைவுகளையும் எடுத்துரைத்தவர், குடும்பத்தின் மீது உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டவர்கள் இரு சக்கர வாகனம் ஓட்டும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிவார்கள் என்றார்.
தொடர்ந்து அனைவரும் தலைகவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எஸ்.பி. பொன்னி எச்சரித்தார். நிகழ்வில், இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிவோம்' என உறுதிமொழி ஏற்றனர். இதில், கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ், காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வங்கதேசத்தில் ஹிந்துக்களின் வீடுகள், கடைகள் மீது தாக்குதல்!
பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி!
இராக் அதிபராக நிஸார் அமிதி தேர்வு!

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

