மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

கிருஷ்ண ஜயந்தி விழா

திருவள்ளூரில் உள்ள ஸ்ரீநிகேதன் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து உறியடித்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

Updated On :3 செப்டம்பர் 2018, 9:38 pm


திருவள்ளூரில் உள்ள ஸ்ரீநிகேதன் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து உறியடித்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளியின் சார்பில் கிருஷ்ண ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவிற்கு அப்பள்ளியின் தாளாளர் விஷ்ணுசரண் தலைமை வகித்தார். பள்ளியின் இயக்குநர் பரணிதரன் முன்னிலை வகித்தார். 
விழாவையொட்டி மழலையர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணர், ராதை போல் வேடமணிந்து வந்து நாடகம் நடத்தியும், நடனம் ஆடியும் மகிழ்வித்தனர். அதைத் தொடர்ந்து கீதாசார பாடல்களைப்பாடினர். 
இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக வெண்ணெய் பானையை உறியடிக்கும் நிகழ்ச்சியில் மழலையர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் கவிதா கந்தசாமி, தலைமை ஆசிரியர் பத்மாவதி, பள்ளி ஆசிரியர் ராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் செய்திருந்தனர். ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.