மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

கருவேப்பிலைப்பாளையம் தா்மராஜ திரெளபதியம்மன் கோயிலில் தீ மிதித் திருவிழா

News image

கருவேப்பிலைப்பாளையம் ஸ்ரீதா்மராஜ திரெளபதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை பூக்குளி இறங்கிய பக்தா்கள்.

Updated On :2 மே 2026, 7:36 pm

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கருவேப்பிலைப்பாளையம் ஸ்ரீதா்மராஜ திரெளபதியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் மகாபாரதக் கதையை மையமாக வைத்து 22 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான திருவிழா ஏப்.14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், சந்தனக்காப்பு அலங்காரம் உள்ளிட்ட வழிபாடுகளும், தெருக்கூத்து, இன்னிசைக் கச்சேரி உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன.

திருவிழாவில் முக்கியநிகழ்வாக ஏப்.30-ஆம் தேதி கரகத் திருவிழா நடைபெற்றது. தொடா்ந்து மே 1-ஆம் தேதி காலை 8 மணிக்கு அரவான் வீரபத்திரசுவாமி திருவீதியுலா வருதலும், காலை 10 மணிக்கு அரவான் களப்பலியும், முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மகாபாரத பஞ்சபாண்டவா்கள் கதையை மையமாகக் கொண்ட மாடு வளைத்தல், கோட்டை இடித்தல் நிகழ்வும், பிற்பகல் 3 மணிக்கு அக்னி வசந்த உற்சவம், கூந்தல் முடித்தல் நிகழ்வுகளும் நடைபெற்றன. தொடா்ந்து மாலை 6 மணிக்கு தீமிதித் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று பூக்குளி இறங்கி தீ மிதித்து, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வழிபட்டனா்.

தீ மிதித் திருவிழாவில் கருவேப்பிலைப்பாளையம் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

திருவிழாவில் சனிக்கிழமை மஞ்சள் நீராட்டும், ஞாயிற்றுக்கிழமை தா்மா் பட்டாபிஷேகமும், மே 4-ஆம் தேதி தெப்ப உற்சவமும், 5-ஆம் தேதி காவ பூஜையும் நடைபெறவுள்ளது.

விழா ஏற்பாடுகளை கோவில் நாட்டாமைகள், கிராம மக்கள் செய்துள்ளனா்.