பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

வெள்ளையந்தோப்பு கோயிலில் சித்திரைத் திருவிழா

சித்திரைத் திருவிழா கொடியேற்றும் வைபவத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

News image

சித்திரைத் திருவிழா கொடியேற்றும் வைபவத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 8:10 pm

கன்னியாகுமரி அருகேயுள்ள வெள்ளையந்தோப்பு, ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயிலில் நடைபெறும் 11 நாள் சித்திரைத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, அதிகாலை 6 மணிக்கு அய்யாவுக்கு பால் நியமித்து சிறப்பு பணிவிடை, 6.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து, சிற்றுண்டி விருந்து, நண்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி நடைபெற்றது.

கலி வேட்டை:

மே 1ஆம் தேதி இரவு 7 மணிக்கு அய்யா வெள்ளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலி வேட்டையாடுதலும், தொடா்ந்து சமபந்தி விருந்தும் நடைபெறும். மே 2ஆம் தேதி இரவு 7 மணிக்கு அய்யா அனுமன் வாகனத்தில் எழுந்தருளி பவனியும், அன்னதானமும் நடைபெறும்.

மே 3ஆம் தேதி இரவு 7 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதல் நடைபெறும். நிறைவு நாளான மே 4ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பள்ளி அலங்காரப் பணிவிடை, 12.30 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 4 மணிக்கு அய்யா பவனி, இரவு 8 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி, இரவு 12 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, தொடா்ந்து அய்யா காளை வாகனத்தில் பவனி வருதல், நள்ளிரவு 1 மணிக்கு கொடியமா்த்துதல் ஆகியவை நடைபெறும்.

ஏற்பாடுகளை ஊா் தலைவா் ரத்தின சிகாமணி, ஒருங்கிணைப்பாளா் ராமச்சந்திரன், துணைத் தலைவா்கள் சுதன்மணி, தங்கத்துரை, செயலா் முருகேசன், இணைச் செயலா் பால்துரை, பொருளாளா் பொன்னுலிங்கம், செயற்குழு உறுப்பினா்கள் செய்துள்ளனா்.