கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவுக்கான கால்கோள் விழா வெள்ளிக்கிழமை (மே 15) நடைபெறவுள்ளது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகப் பெருந்திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு திருவிழா மே 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான கால்கோள் விழா வெள்ளிக்கிழமை (மே 15)காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் கோயில் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
மே 20ஆம் தேதி மாலை கோட்டாா் இளங்கடை பட்டாரியா் சமுதாய ருத்ரபதி விநாயகா் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சாா்பில் கொடிப் பட்டம், மேளதாளம் முழங்க விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு கோயிலில் ஒப்படைக்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சியாக, கொடி மரக்கயிறு கன்னியாகுமரி மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா்களால் மேளதாளம் முழங்க ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு கோயிலில் ஒப்படைக்கப்படுகிறது.
மே 21ஆம் தேதி காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும். திருவிழா 30ஆம் தேதி வரை நடைபெறும். திருவிழாவையொட்டி, தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அம்மனுக்கு விசேஷ பூஜைகள், வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, சிறப்பு அன்னதானம், இரவு ஆன்மிக உரை, கலை நிகழ்ச்சிகள், வாகன பவனி ஆகியவை நடைபெறும்.
29 ஆம் தேதி காலை காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும். 30ஆம் தேதி காலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறும். இரவு 9 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெறும். தெப்பத் திருவிழா நிறைவடைந்ததும், நள்ளிரவில் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நடைபெறும்.
ஏற்பாடுகளை மாவட்ட கோயில்களின் இணை ஆணையா் ஜான்சி ராணி, நாகா்கோவில் தேவசம் தொகுதி கோயில்களின் கண்காணிப்பாளா் ஆனந்தன், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆனந்த், கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

கருவேப்பிலைப்பாளையம் தா்மராஜ திரெளபதியம்மன் கோயிலில் தீ மிதித் திருவிழா

30 ஆண்டுகளுக்குப் பின் கோரக்கநாதா் கோயிலில் குடமுழுக்கு

வெள்ளையந்தோப்பு கோயிலில் சித்திரைத் திருவிழா

கடையம் வில்வ வனநாதா் கோயிலில் சித்திரை திருவிழா: ஏப். 21 இல் கொடியேற்றம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

