• திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், அரிகேசவநல்லூர் அருள்மிகு ஸ்ரீ பெரிய நாயகி சமேத அருள்மிகு ஸ்ரீஅரியநாதசுவாமி திருக்கோயில் மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேக விழா ஜூலை 4-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 7.30 மணி முதல் 11.30 மணிக்குள் நடைபெறும்.
• ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் மீனாட்சி அம்மை உடனாகிய சொக்கநாதப் பெருமான் திருக்கோயிலில், 51} ஆம் மாத திருவாசக முற்றோதுதல் விழா ஜூலை 5 -ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் நடைபெறும்.
• கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், பெள்ளாதி கிராமம், தேரம்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோயிலில் ஜூலை 5 காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் திருக்குட நன்னீராட்டுப்பெருவிழா நடைபெறும்.
• ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், அக்ரஹாரம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ஜூலை 5 ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடைபெறுகிறது.
• திருமயிலை அருள்மிகு அப்பர் சுவாமி திருக்கோயிலில் 175}ஆம் ஆண்டு குருபூஜை விழா ஜூலை 9}இல் நடைபெறுகின்றது. அன்று மாலை பெரிய ரிஷப வாகனத்தில் சுவாமி - அம்பாள் திருவீதிப் புறப்பாடு, எதிர்சேவையில் அருள்மிகு அப்பர் சுவாமிகள் புறப்பாடு நடைபெறும்.
• திருவள்ளூர் மாவட்டம், நரசிங்கபுரம் கிராமத்தில் குகத்திரு திருவேங்கடசுவாமிகள் பத்தாம் ஆண்டு குருபூஜை விழா ஜூலை 10}ஆம் தேதி நடைபெறும். இடம்: ஈசூர் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் திருமடம், கிடங்கத் தெரு, நரசிங்கபுரம். நேரம்: காலை 6 மணிமுதல்.
• தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், அருள்மிகு ராஜ கோபாலசாமி என்கிற அருள்மிகு சிவேந்திர சுவாமி திருக்கோயிலில் அருள்மிகு ஸ்ரீ பார்வதி சமேத ஸ்ரீ சிவேந்திரர் சுவாமிக்கு 21-ஆம் ஆண்டுத் திருக்கல்யாண உற்சவம் ஜூலை 10 }ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு மேல் நடைபெறும்.
• திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகில் முடிகொண்டான் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சக்தி ஆஞ்சநேயர் திருக்கோயில் மகாசம்ப்ரோக்ஷணம் ஜூலை 12}இல் நடைபெறும்.
• திருவாரூர் மாவட்டம், எண்கண் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு ஜூலை 9 (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எந்த கோயிலில் என்ன விசேஷம்? ஜூன் 19 முதல் 25 வரை

அடுத்த ஒரு வாரத்திற்கு.. எந்த கோயிலில் என்ன விஷேசம்?

எந்த கோயிலில் என்ன விசேஷம்?

எந்த கோயிலில் என்ன விஷேசம்?
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK



