காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

எந்த கோயிலில் என்ன விசேஷம்?

தஞ்சாவூர் தெற்குவீதி, கலியுக வெங்கடேசப் பெருமாள் கோயிலில்..

News image
Updated On :5 ஜூன் 2026, 4:05 pm IST

• தஞ்சாவூர் தெற்குவீதி, கலியுக வெங்கடேசப் பெருமாள் கோயிலில் ஜூன் 5 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திருவோணம் சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு சிறப்புத் திருமஞ்சனம், சிறப்பு அலங்கார தீபாராதனை, மாலை சிறப்பு அலங்காரம் நடைபெறும்.

• அலைகடல் பக்த ஜன சபா சார்பில் ஐந்தாம் ஆண்டு ஸ்ரீ ராதா மாதவ கல்யாண மஹோத்ஸவம் ஜூன் 6, 7}ஆம் தேதிகளில் பம்மல் அண்ணாசாலை ஸ்ரீஸத்ஸங்கம் வளாகத்தில் சேரன்மகாதேவி பால வெங்கடகிருஷ்ண பாகவதர் குழுவினரால் நடத்தப்படுகிறது.

• திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி கிராமத்தில் அருள்மிகு நீலாம்பிகை சமேத ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி கோயிலின் மகாகும்பாபிஷேகம் ஜூன் 7}ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் நடைபெறுகிறது.

• சென்னை மேடவாக்கம், வடக்குப்பட்டு பிரதான சாலையில் உள்ள அருள்மிகு பாலகுருநாதஸ்வாமி திருக்கோயிலில் ஜூன் 7 (ஞாயிறு) மண்டலாபிஷேக பூர்த்தி விழா வேதபாராயணம், மகாபிஷேகம், சங்காபிஷேகம் போன்ற வைபவங்களுடன் நடைபெற இருக்கின்றன.

• கோவை, மேட்டுப்பாளையம் வட்டம், சிறுமுகை வழி, இடுகம்பாளையம் அருள்மிகு அனுமந்தராயசுவாமி திருக்கோயிலில் ஐந்து நிலை ராஜகோபுர நிலவு கால் பூஜை ஜூலை 7 (ஞாயிறு) காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் நடைபெற உள்ளது.

• ஸத்குரு சாந்தானந்த சுவாமிகள் டிரஸ்ட் ஆதரவில் திருவண்ணாமலை அடி அண்ணாமலை கிரிவலப்பாதை ஓம் நகரில் உள்ள சாந்தம் பெரியவா ஆஸ்ரமத்தில் ஸ்ரீ மஹாபெரியவா வேதபாடசாலை தொடக்க விழா ஜூன் 7}ஆம் தேதி காலை 8 மணி அளவில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் போன்ற வைபவங்களுடன் நடைபெற உள்ளது.

• ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர், அருள்மிகு மீனாட்சியம்மை உடனாகிய சொக்கநாதப் பெருமான் திருக்கோயிலில் திருமுறை சிவநெறி திருக்கூட்டத்தாரின் 50 }ஆம் மாத திருவாசக முற்றோதுதல் விழா ஜூலை 7 (ஞாயிறு) காலை 8 மணி முதல் நடைபெற உள்ளது.

• வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே டி.டி.மோட்டூர் மதுரா பெரியபள்ளம் கிராமத்தில் 32 அடி உயர ஸ்ரீமகாகாளிகாம்பாள் தேவஸ்தானத்தில் மகா கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழா ஸ்ரீலஸ்ரீ சிவா சுவாமிகள் தலைமையில் ஜூன் 8 (திங்கள்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

• ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், விளத்தூர் (விளக்கூர்) முத்துராமலிங்கபுரம், அருள்மிகு திருக்கோணேசுவரர் கோயில் திருக்குட நன்னீராட்டுப்பெருவிழா ஜூன் 10 (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெற இருக்கிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், டேம்ரோடு } கொடுமடுவில் அமைந்துள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் முப்பதாம் ஆண்டு விழா, திருமணத்தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம் ஜூன் 9 (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.