டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

எந்த கோயிலில் என்ன விஷேசம்?

கும்பாபிஷேகம் முதல் தெப்போற்சவம் வரை..

News image
Updated On :8 மே 2026, 4:08 pm IST
  • ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், வடுகபட்டி கிராமம், வாங்கலால் வலசு , அருள்மிகு ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ கருப்பண்ணசுவாமி, ஸ்ரீ பொட்டுசாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மே 8 (வெள்ளிக்கிழமை) காலை 7.50 மணிக்கு மேல் 8.50 மணிக்குள் நடைபெற உள்ளது.

  • மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், 16 மாமாகுடி கிராமம், அருள்மிகு சிவகாமசுந்தரி அம்பிகா சமேத சிவலோகநாத சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் மே 8 (வெள்ளிக்கிழமை) காலை 8.15 முதல் 9.15 மணிக்குள் நடைபெற உள்ளது.

  • திருப்பூர் மாவட்டம், அவிநாசி கருணை நாயகி உடனுறை அவிநாசியப்பர் திருக்கோயில் அருகிலுள்ள தாமரைக்குளம் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் கோயில் திருப்பணி தொடக்க விழா மே 8 காலை 7 மணி முதல் 8 மணிக்குள் நடைபெற இருக்கிறது.

  • திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் மே 8 காலை 8.30 மணிக்கு மேல் அருள்மிகு பார்வதி சமேத அருள்மிகு கல்யாணசுந்தரர் தெப்பத் திருநாள் மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், அன்றும் மே 9, 10 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு மேல் மூன்று முறை தெப்ப உலாவும் நடைபெற உள்ளன.

  • வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயிலின் வைகாசித் திருவிழா ஏப்ரல் 30}இல் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சி நிரல்: மே 11} திருக்கல்யாணம்; 14- தேர்த் திருவிழா; 15- அம்மன் சிரசுப் பெருவிழா; 16- மஞ்சள் நீராட்டு; 17- புஷ்பப் பல்லக்கு; 22- விடையாற்றி உற்சவம். விழாவையொட்டி, கோயிலில் 11}ஆம் தேதி மாலை 6 மணிக்கு பாலாறு வேலாயுதம் சுவாமிகளும், 16}இல் தொல்லியல் ஆய்வாளர் சு.ஜவஹர் பாபுவும் ஆன்மிக உரையாற்றுகின்றனர். மே 8, 10, 12, 13}ஆம் தேதிகளில் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும், 9}இல் முனைவர் பா.சம்பத்குமார் தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றமும், 17}இல் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

  • சென்னை வட திருமுல்லைவாயில் அருள்மிகு கொடியிடை நாயகி சமேத மாசிலாமணீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை சதயம் சந்தனக் காப்பு வைபவம் மே 9 முதல் 11}ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

  • தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், பட்டீச்சுரம் அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை அருள்மிகு தேனுபுரீசுவர சுவாமி திருக்கோயிலில் சித்திரை கோடாபிஷேகம் 1008 பால்குடம் எடுத்தல் மே 10 (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் நடைபெற இருக்கிறது.

  • சென்னை மாதவரம், ஸ்ரீ கனகவல்லித் தாயார் சமேத ஸ்ரீ கரிவரதராஜ சுவாமி திருக்கோயிலில் 17}ஆம் ஆண்டு, வைகாசி பிரம்மோற்சவம் மே 17 (ஞாயிற்றுக் கிழமை) முதல் மே 27 (புதன்கிழமை) வரை நடைபெற இருக்கிறது. இதில் முக்கிய நிகழ்வாக மே 20 (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு கருட சேவை புறப்பாடு நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.