ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

இந்த வாரம்.. எந்த கோயிலில் என்ன விஷேசம்?

திருத்தேரோட்டம் முதல் கும்பாபிஷேகம் வரை...

News image

தேரோட்டம்

Updated On :10 ஏப்ரல் 2026, 4:09 pm IST
  • திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் நடைபெற்று வரும் பங்குனி பிரம்மோற்சவத்தில் ஏப்ரல் 11 காலை 7 - 8 மணிக்குள் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

  • சென்னை - 66, புழல், காவாங்கரை கிழக்கு, தனலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 17- ஆம் ஆண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 12 முதல் 14 வரை ஆகிய நான்கு நாள்கள் காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற இருக்கிறது. இதில் முக்கிய நிகழ்வுகள்: ஏப்ரல் 12 காலை 11 மணிக்கு 108 பால்குட அபிஷேகம், மாலை 6 மணிக்கு மாவிளக்கு, அக்னிச்சட்டி, முளைப்பாரி ஊர்வலம்.

  • சென்னை குரோம்பேட்டை, கிருஷ்ணாநகர், ராமபக்த சமாஜம் மண்டபத்தில் ஸ்ரீராமநவமி நிறைவுவிழா, ஸ்ரீ சீதாகல்யாணம். தஞ்சாவூர் ராஜேஷ் பாகவதர் குழுவினர் பங்கேற்பு. நாள்: ஏப்ரல் 12, காலை 8 மணி முதல்.

  • காஞ்சிபுரம் மாவட்டம், பழைய சீவரம் அருகில் உள்ள திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள ஸ்ரீஆதிபுரீஸ்வரர் கோயிலில் ஏப்ரல் 12-இல் காலை 9 மணிஅளவில் உழவாரப் பணி நடைபெறுகிறது.

  • தஞ்சாவூர் மாவட்டம், நரசிங்கன்பேட்டை, ஸ்ரீ லோகநாயகி சமேத ஸ்ரீ சுயம்புநாதசுவாமி கோயிலில் ஏப்ரல் 14, இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

  • சென்னை குரோம்பேட்டை, குமரன்குன்றம் கோயிலில் ஏப்ரல் 14 -இல் 48ஆவது ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு படித்திருவிழா, பல்வேறு திருப்புகழ் சபையினர் பங்கேற்கும் மாபெரும் திருப்புகழ் இன்னிசை விழா காலை 5.30 முதல் இரவு 8.30 வரை நடைபெறும்.

  • கிழக்குத் தாம்பரம் ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீீசங்கராசார்ய ஸம்ஸ்தானம் கிளை ஸ்ரீமடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி மகோத்ஸவம் ஏப்ரல் 18-இல் தொடங்கி 21 வரை நடைபெறுகிறது. இதில் ஏப்ரல் 20 அட்சய திருதியை, காலை 10 மணிக்கு ஸ்ரீவித்யா ராஜராஜேஸ்வரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்; மாலை 7 மணிக்கு ஆனந்த ரதோற்சவம்; ஏப்ரல் 21 -சங்கர ஜெயந்தி - ஸ்ரீ ஆதிசங்கரருக்கு விசேஷ ருத்ராபிஷேகம், அலங்காரம்; மாலை ஆனந்த ரதோத்ஸவம்.

  • திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் பூண்டி நீர்த்தேக்கம் அருகில் உள்ள ஸ்ரீ ராகவேந்தர க்ரந்தாலயாவில் சமஷ்டி சங்கல்ப சேவை ஏப்ரல் 18 முதல் 20 வரை நடைபெறுகிறது. இதில் ஏப்ரல் 19 மகாரத உற்சவம், பக்தர்கள் கரங்களினால் பாலபிஷேகம், ஏப்ரல் 20 சந்தனக் காப்பு.

  • சென்னை, மேடவாக்கத்தை அடுத்து வடக்குப்பட்டு பிரதான சாலையில் உள்ள அருள்மிகு பாலகுருநாதஸ்வாமி திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் ஏப்ரல் 20, காலை 9.45 அளவில் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.