தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 90-ஆம் ஆண்டு முதல் ஸ்ரீராம நவமி மகோத்ஸவம் நடைபெற்று வருகிறது. இதில் மே 15 -ஏகதின லட்சார்ச்சனை, மே 16 - திவ்யநாமம், டோலோத்ஸவம், மே 17 - சீதா கல்யாணம், ராமர் திருவுருவப்படம் திருவீதியுலா, மே 18, 19 - அகண்ட ராமநாம தாரக பஜனை நடைபெறும்.
தஞ்சாவூர், அருள்மிகு ஸ்ரீ பிரதாப வீர ஆஞ்சனேயர் (மூலை அனுமார்) கோயிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு மே 16 (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் சிறப்பு வழிபாடும், அன்று மாலை 6 மணிக்கு அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர், கரந்தை ஆதி பீமராஜ கோஸ்வாமி அதிஷ்டானத்தில் உள்ள வீர ஆஞ்சனேயருக்கு மே 16 (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு சிறப்புத் திருமஞ்சனம், அலங்காரம், கூட்டுபிரார்த்தனை நடைபெற இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகா, பொன்னாக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு உண்ணாமுலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் மே 17 }ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4.30 வரை சிவாலய வழிபாட்டு மன்றத்தின் சார்பில் திருவாசக முற்றோதுதல் நடைபெறுகிறது.
சென்னை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், தொழுப்பேடு அருகில் கடமலைபுத்தூரில் உள்ள ஸ்ரீ இராமானுஜர் கூடத்தில் ஸ்ரீ பகவத் இராமானுஜரின் 1009}ஆவது வைகாசி திருவாதிரை திருநட்சத்திர ஜெயந்தி பெருவிழா மே19-இல் நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிஅளவில் கோபூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. இதனையொட்டி, ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜபெருமாள், ஸ்ரீ இராமானுஜர் உற்சவ மூர்த்திகளுக்குத் திருமஞ்சனம், நாமசங்கீர்த்தனத்துடன் புஷ்ப அலங்கார சேவையில் ஸ்ரீ இராமானுஜர் ஊர்வலம், ஸ்ரீ பிரபந்த இன்னிசை, அருள் உரைகள், ஸ்ரீ இராமானுஜர் நூற்றந்தாதி சேவை, பஜனாம்ருதம், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், சிக்காரம்பாளையம் கிராமம், கன்னார்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மே 20}ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெறுகிறது.
மயிலை அருள்மிகு காமாட்சி அம்பாள் உடனுறை வெள்ளீசுவரர் திருக்கோயில் வைகாசிப் பெருவிழா மே 21 தொடங்கி ஜூன் 11 வரை நடைபெறுகிறது. மே 22 - கொடியேற்றம், மே 24 } அதிகாரநந்தி, மே 26 - வெள்ளி ரிஷப வாகனம், மே 28 - திருத்தேர், மே 29 - சுக்கிர பகவான் கண் பெறுதல், மே 31 - தீர்த்தவாரி, திருக்கல்யாணம் நடை பெறுகின்றன.
காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம் மே 25 }இல் தொடங்கி ஜூன் 5 வரை நடைபெறுகிறது. முக்கிய நாள்கள்: மே 30 - கருடசேவை, ஜூன் 3 -திருத்தேர், ஜூன் 5 - தீர்த்தவாரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எந்த கோயிலில் என்ன விஷேசம்?

அடுத்த ஒரு வாரத்திற்கு.. எந்த கோயிலில் என்ன விஷேசம்?

கும்பாபிஷேகம் முதல் பட்டாபிஷேகம் வரை.. எந்த கோயிலில் என்ன விஷேசம்!
இந்த வாரம்.. எந்த கோயிலில் என்ன விஷேசம்?
விடியோக்கள்

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை

