• சென்னை, புழல், பாலாஜி நகரில் உள்ள காசி விஸ்வநாதர் 27 நட்சத்திரம் சித்தர் குடிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மே 1-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் வரை நடைபெற உள்ளது.
• தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர், சாம்பவர்மூர்த்தி திருக்கோயிலில் இரண்டாம் ஆண்டு மாபெரும் 1108}திருவிளக்கு பூஜை மே 1}ஆம் தேதி, மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
• விழுப்புரம் மாவட்டம், ஆனாங்கூர் ஏரி, வன்னிய காட்டில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஆதி மகா காளியம்மன், ஸ்ரீ துர்கை அம்மன், ஸ்ரீ ஈச்சடி வீரன் கோயிலில் சித்திரை பெüர்ணமியை முன்னிட்டு மே 1}ஆம் தேதி காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை பல்வேறு உற்சவங்கள் நடைபெற உள்ளது.
• கோயம்புத்தூர் மாவட்டம், சிறுமுகை, சென்னம்பாளையம் ஸ்ரீ எமதர்மர் கோயிலில் சித்ரா பெüர்ணமி சிறப்பு வழிபாடு மே 1}ஆம் தேதி காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற இருக்கிறது.
• தென்காசி மாவட்டம், கடையம் அருகில் உள்ள தோரணமலை ஸ்ரீமுருகன் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மே 1}ஆம் தேதி காலை 6 மணியளவில் கிரிவலம் நடைபெறும்.
• திருச்சி மாவட்டம், குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் திருக்கோயிலில் மே 1 காலை மூலவர் முத்தங்கி சேவையும், இரவு 8 மணி அளவில் தெப்போத்ஸவமும் நடைபெறுகிறது.
• வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, வீரி செட்டிபள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மே 1-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாக நடைபெற உள்ளது.
• ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலிக்கு அருகில் மகேந்திரவாடி கிராமத்தில் ஸ்ரீ காமாட்சி தேவி சமேத ஸ்ரீ சோமநாத ஈஸ்வரப் பெருமான் கோயிலில் திருக்கல்யாண வைபவம் மே 1}ஆம் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ லலிதாசகஸ்ரநாம திருவிளக்கு பூஜை நடைபெறும்.
• பாடகச்சேரி ஸ்ரீ ராமலிங்கசுவாமிகளின் 153}ஆவது அவதார சித்திரை விழா மே 1-ஆம் தேதி கும்பகோணம் கூழ்சாலை முத்துபிள்ளை மண்டபத்தில் குத்துவிளக்கு பூஜை, பைரவ பூஜை , மகேஸ்வரபூஜை உள்ளிட்ட வைபவங்களுடன் நடைபெறுகிறது.
• ஓம் ஸ்ரீ மஹாபெரியவா சத்சங்கம் டிரஸ்ட் ஆதரவில் சித்திரை மாத அனுஷ மகோத்ஸவம் சிறப்பு பூஜைகள், ஹோமங்களுடன் சென்னை மேற்கு சைதாப்பேட்டை பார்ஸன் நகர் வளாகத்தில் மே 3-ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாதகோட்டா ஸ்ரீ சீதாராம ஆஞ்சனேய சுவாமி கோயில் தேரோட்டம்

ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோவிலில் புக்கோற்சவம்
இந்த வாரம்.. எந்த கோயிலில் என்ன விஷேசம்?

சேலத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்: 25 போ் பங்கேற்பு
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


