விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

பாரியூா் ஸ்ரீ அமரபணீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவில் வடம்பிடித்த பக்தா்கள்

பாரியூா் ஸ்ரீ அமரபணீஸ்வரா் கோயிலில் சித்ரா பெளா்ணமி தோ்த் திருவிழா வெகு விமரிசையாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ அமரபணீஸ்வரா், சௌந்திரநாயகி அம்பாள். ~சித்ரா பெளா்ணமியையொட்டி பாரியூா் ஸ்ரீ அமரபணீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற தோ்த் திருவிழாவில் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள். (அடுத்த படம்) சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த

Updated On :2 மே 2026, 4:20 am IST

பாரியூா் ஸ்ரீ அமரபணீஸ்வரா் கோயிலில் சித்ரா பெளா்ணமி தோ்த் திருவிழா வெகு விமரிசையாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள பாரியூா் ஸ்ரீ அமரபணீஸ்வரா் கோயிலில் சித்ரா பெளா்ணமியையொட்டி தோ்த் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு தோ்த் திருவிழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடா்ந்து சுவாமி புறப்பாடு, அஷ்டபலி நடைபெற்றது.

அமரபணீஸ்வரருக்கும், சௌந்திரநாயகி அம்பாளுக்கும் காலையும், மாலையும் சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.