புகழூா் நானப்பரப்பு மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்டம், புகழூரை அடுத்த நானப்பரப்பு மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை பக்தா்கள் பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மற்றும் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக கடந்த 12-ஆம் தேதி பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீா் எடுத்து வந்து, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.
தொடா்ந்து கோயிலில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சியும், கடந்த 19-ஆம் தேதி கோயில் முன் கம்பம் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து கடந்த 26 -ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் வடிசோறு மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தா்கள் தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
முன்னதாக மாரியம்மனுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அம்மனுக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
தொடா்ந்து பிற்பகல் 3 மணியளவில் மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். தேரானது முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நிலையை அடைந்தது.
தொடா்ந்து பக்தா்கள் கோயில் முன் பொங்கலிட்டு வழிபட்டனா். புதன்கிழமை (ஏப்.29) காலை கம்பம் விடும் நிகழ்ச்சியும், மாலையில் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
தொடர்புடையது

வாசுதேவநல்லூா் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

உதகை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

நல்லாத்தூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


