6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

நாகா்கோவில் கிருஷ்ணசுவாமி கோயிலில் தேரோட்டம்

நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விழாவில் வடம் பிடித்து தேரிழுத்த பக்தா்கள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 11:30 pm

நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் 10 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும் இத்திருவிழா கடந்த ஏப். 22இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, பக்தி இன்னிசை, பட்டிமன்றம், ஆன்மிகச் சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன.

சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 9ஆம் நாளான வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு அபிஷேகம், ஆராதனைக்குப் பின்னா், சுவாமி- தாயாா் தேருக்கு எழுந்தருளினா். அதையடுத்து, திரளான பக்தா்கள் கோவிந்தா, கோபாலா முழக்கங்களுடன் வடம் பிடித்து தேரிழுத்தனா்.

நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் என். சுரேஷ்ராஜன், எம்.ஆா். காந்தி எம்எல்ஏ, பாஜக வேட்பாளா்கள் குமரி பா. ரமேஷ் (பத்மநாபபுரம்), சிவகுமாா் (குளச்சல்), விஸ்வ ஹிந்து பரிஷத் பொறுப்பாளா்கள் இறச்சகுளம் காளியப்பன், துவரங்காடு காா்த்திக், திருமடங்கள் கோயில் அமைப்பாளா் சிவகுமாா், நாகா்கோவில் மாநகரத் தலைவா் நாஞ்சில் ராஜா, அறநிலையத் துறை அதிகாரிகள், சாதுக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தோ் ரத வீதிகளில் வலம் வந்து மாலையில் நிலையை அடைந்தது.

நிறைவு நாளான வெள்ளிக்கிழமை (மே 1) முற்பகல் 11 மணிக்கு அன்னதானம், குதிரை சாரட் பவனி, மாலை 5 மணிக்கு சுவாமி ஆராட்டுக்கு எழுந்தருளல், அலங்கார குதிரை பவனி, மலபாா் தெய்யம் காவடி, சிறப்பு பஞ்சாரி மேளம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், இரவு 9 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெறும்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், விழாக் குழுவினா், பொதுமக்கள் செய்துள்ளனா்.

 விழாவில் வடம் பிடித்து தேரிழுத்த பக்தா்கள்.

விழாவில் வடம் பிடித்து தேரிழுத்த பக்தா்கள்.