மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம்

திருவள்ளூர் அருகே திமுக சார்பில் நடத்தப்பட்ட ஊராட்சி சபைக் கூட்டத்தில் தெருவிளக்கு வசதி உள்ளிட்ட

Updated On :24 ஜனவரி 2019, 12:34 am IST

திருவள்ளூர் அருகே திமுக சார்பில் நடத்தப்பட்ட ஊராட்சி சபைக் கூட்டத்தில் தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோரிக்கை மனுக்களை சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரனிடம் அளித்தனர். 
திமுக சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறியும் வகையில்     ஊராட்சி சபைக் கூட்டம் நடத்த அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு வலியுறுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் திருவள்ளூர் தெற்கு மாவட்டம் திமுக சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் ஊராட்சி சபைக் கூட்டம் நடத்தி வருகின்றனர். 
இந்நிலையில் கடம்பத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் ராமன்கோயில் கிராமத்தில் ஊராட்சி சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
அப்போது, பொதுமக்கள் இக்கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க ஆழ்குழாய் கிணறு, கால்வாய் சீரமைப்பு, தெருவிளக்கு வசதி, சிமென்ட் சாலை வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார். 
இந்த மனுக்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். 
அதேபோல் கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள பிரியாங்குப்பம், விடையூர், செஞ்சி, சிற்றம்பாக்கம், காவாங்கொளத்தூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற ஊராட்சி சபைக்கூட்டங்களிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 
இதற்கான ஏற்பாடுகளை கடம்பத்தூர் ஒன்றிய செயலர் அரி உள்ளிட்ட அக்கட்சியினர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.