கோடை வெய்யில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறியிருந்தோம். கோடை வெய்யில் காரணமாக அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கைகள் வருகின்றன.
ஜூன் முதல் வாரம் கோடை வெய்யில் எப்படி இருக்கும், வெப்ப அலை இருக்குமா? என்பது குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் விவரங்கள் கேட்டுள்ளோம்.
வானிலை ஆய்வு மைய அதிகாரிகளின் தகவல் அடிப்படையில், முதல்வருடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.
பள்ளிகளில் காலை மற்றும் மதிய உணவுத் திட்டம் தொடரும். குழந்தைகளைப் பாதிக்கும் எந்த விஷயங்களையும் செய்ய மாட்டோம். எந்தத் திட்டங்களும் நிறுத்தப்படாது. உணவின் தரத்தில் சமரசம் செய்ய மாட்டோம். இந்த திட்டங்களை மேலும் மேம்படுத்தி அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கும்படி செய்வோம்" என்கிறார்.
Summary
Summer heat wave: Will School Reopening Be Postponed, Minister Rajmohan Responds
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!

திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



