செவிலியர் மாணவி உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான் இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்! எதிர்காலப் போர்கள் இணைய, பல்முனை தாக்குதலாக இருக்கும்: முப்படைத் தலைமைத் தளபதி ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்துக்கு ஈரான் மறுப்பு!
/

துரித நடவடிக்கைகள் மூலம் சட்டம் - ஒழுங்கு காக்கப்படுகிறது: அமைச்சர் ராஜ்மோகன்

துரித நடவடிக்கைகள் மூலம் சட்டம் - ஒழுங்கு பேணிக் காக்கப்படுகிறது என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தது குறித்து...

News image

அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 11:18 am IST

தமிழகத்தில் துரித நடவடிக்கைகள் மூலம், சட்டம் - ஒழுங்கு பேணிப் பாதுகாக்கப்படுகிறது என்று அமைச்சர் ராஜ்மோகன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

சென்னையில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மக்களின் பேராதரவோடு தவெகவின் இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் அல்ல; ஐம்பது ஆண்டுகள் நீடிக்கும்.

ஆட்சி அமைத்து ஒரு மாதம் முடிவதற்கு முன்னரே, அதாவது முதல் நாளிலிருந்தே, காவல்துறை அதிகாரிகளின் துரிதப் பணி காரணமாக பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக குற்றம் செய்பவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு பரேட் நடத்துவது, முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக அவர்களில் முக்கியமானவர்களைக் கைது செய்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பல இடங்களில் இதுகுறித்து ஆலோசகள் செய்து, நகரங்களில் மட்டுமல்லாமல் எல்லா ஊர்களிலும் சட்டம் - ஒழுங்கு நடவடிக்கையைப் பேணிப் பாதுகாப்பதற்காக அனைத்து துறை சார்ந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது.

தவறு எங்கு நடந்தாலும் தவறுதான். நேற்று நிகழ்ந்த சம்பவத்திலும் காவல்துறை துரிதமாக செயல்பட்டு அந்தக் குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் எப்போதும் நடைபெறக் கூடாது. அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

Summary

Speaking to reporters in Chennai, School Education Minister Rajmohan stated that law and order is being maintained through swift measures.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.