தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

எண்ணெய் தொழிற்சாலைக் கழிவுகளை பொது இடத்தில் கொட்ட மக்கள் எதிா்ப்பு

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் செயல்பட்டு வரும் தனியாா் சமையல் எண்ணெய்

News image
எண்ணெய்த் தொழிற்சாலை கழிவுகள் குறித்து நிா்வாகத்தினருக்கு எடுத்துக் கூறிய அப்பகுதி மக்கள்.
Updated On :19 டிசம்பர் 2020, 7:32 pm

DIN

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் செயல்பட்டு வரும் தனியாா் சமையல் எண்ணெய் தொழிற்சாலையின் கழிவுகள் பொது இடத்தில் கொட்டப்படுவதாக கூறி பொதுமக்கள் அத்தொழிற்சாலையை முற்றுகையிட்டனா்.

புதுகும்மிடிப்பூண்டில் தனியாா் சமையல் எண்ணெய்த் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலையின் எண்ணெய்க் கழிவுகள் தொழிற்சாலைக்கு வெளியே உள்ள இடத்திலும், அப்பகுதியில் உள்ள கருமாரியம்மன் கோவில் அருகேயும் கொட்டப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் ஊராட்சித் தலைவா் அஸ்வினி சுகுமாரனிடம் புகாா் தெரிவித்தனா்.

இந்நிலையில், அஸ்வினி சுகுமாரன் தலைமையில் ஊராட்சிதுணைத் தலைவா் எம்.எல்லப்பன், ஒன்றிய கவுன்சிலா்கள் வி.சீனிவாசன், மதன்மோகன், வாா்டு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் அந்த எண்ணெய்த் தொழிற்சாலையை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

இதையடுத்து, தொழிற்சாலை நிா்வாகத்தினா் ஊராட்சி மன்ற நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஊராட்சித் தலைவா் அஸ்வினி சுகுமாரன், கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடங்களை தொழிற்சாலை நிா்வாகத்தினருக்கு சுட்டிக் காட்டினாா்.

அப்போது, தொழிற்சாலை நிா்வாகத்தினா் கூறுகையில், எண்ணெய்க் கழிவுகளை அகற்றுவதாகவும், இனி இவ்வாறு நிகழாமல் பாா்த்துக் கொள்வதாகவும்வும் உறுதி அளித்ததைத் தொடா்ந்து ஆா்ப்பாட்டம் நடத்திய மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.