காவல் நிலையத்திற்கு ஜெராக்ஸ், பிரிண்டர் எந்திரம் வழங்கல்
கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவர் ரமணி சீனிவாசன் தனது சொந்த செலவில் காவல் நிலையத்திற்கு


கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவர் ரமணி சீனிவாசன் தனது சொந்த செலவில் காவல் நிலையத்திற்கு வண்ண ஜெராக்ஸ் மற்றும் பிரிண்டர் எந்திரம் ஆகியவைகளை வழங்கினார்.
திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்திற்கு வருவோர் புகார் மனுக்களை நகல் எடுப்பதற்காக அலைய வேண்டியிருந்தது. இதை தடுக்கும் வகையில் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 43 ஊராட்சிகளைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் தனது சொந்த செலவில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான ஜெராக்ஸ் மற்றும் பிரிண்டர் எந்திரம் ஆகியவையும் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரமணி சீனிவாசன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைசெயலாளருமான சிற்றம் ஜெ. சீனிவாசன் ஆகியோர் கடம்பத்தூர் காவல் நிலையத்திற்கு பொது மக்கள் பயன்பாட்டிற்காக வண்ண நகல் எடுக்கும் ஜெராக்ஸ் மற்றும் பிரின்டர் எந்திரம் ஆகியவைகளை வழங்கினார்.
அப்போது, உடன் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் பொ.பூபாலன், நயப்பாக்கம் கிளை கழக செயலாளர் ஜி. சிவக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...