ரூ. 5,300 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 1000 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், எம்ஆர்எஃப் நிறுவனம், சிவகங்கை மாவட்டம், சிப்காட்- இலுப்பைக்குடி தொழிற் பூங்காவில் புதிய டயர் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு கப்பல் கட்டுமானக் கொள்கை 2026 – யை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது.
சீரான, பரவலான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை நோக்கமாகக்கொண்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. இந்தியாவிலேயே, இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி அடைந்த மாநிலமாகவும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
எம்ஆர்எஃப் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
எம்ஆர்எஃப் நிறுவனம், டயர்கள், டியூப்கள் மற்றும் பாதுகாப்புப் பட்டைகள் (Flaps) ஆகியவற்றைத் தயாரித்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் விநியோகம் செய்து வரும் பாரம்பரியமிக்க நிறுவனமாகும்.
இந்நிறுவனம், இந்தியாவில் 10 இடங்களில் தனது ஆலைகளை நிறுவியிருந்தாலும், தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில், அதாவது திருவொற்றியூர், அரக்கோணம் மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் தனது உற்பத்தி ஆலைகளைக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
எம்ஆர்எஃப் நிறுவனம், தனது வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், அடுத்த 12 ஆண்டுகளில், ரூ. 5300 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 1000 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சிவகங்கை மாவட்டம், சிப்காட் - இலுப்பைக்குடி தொழிற் பூங்காவில் ஒரு புதிய அதிநவீன டயர் உற்பத்தி ஆலை அமைக்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று(மார்ச் 4) முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு கப்பல் கட்டுமானக் கொள்கை 2026 வெளியீடு
தமிழ்நாட்டை நிலைத்த மற்றும் தொழிற்நுட்ப ரீதியாக மேம்பட்ட கப்பல் கட்டுமானத்தில் உலகளவில் முன்னணி மாநிலமாக நிலைநிறுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தமிழ்நாடு கப்பல் கட்டுமானக் கொள்கை 2026 வடிவமைக்கப்பட்டு தமிழ்நாடு முதல்வரால் இன்றைய நாள் வெளியிடப்பட்டது.
Summary
The Chief Minister signed a deal with MRF, which will provide employment to 1,000 people with an investment of Rs. 5,300 crore.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காவிக்கொடியை கருப்புக்கொடி வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

தேஜஸ்வி யாதவை வரவேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

மகாராஷ்டிரத்தில் ரூ.60,000 கோடி முதலீடு: வியத்நாமின் வின்குரூப்-மாநில அரசு ஒப்பந்தம்

ரூ. 1000 கோடி முதலீடு... காத்திருக்கும் கேவிஎன் புரடக்ஷன்ஸ்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


