ஆரணி ஆற்றில் மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் கடத்தியதாக மூன்று மாட்டு வண்டிகளை போலீசாா் பறிமுதல் செய்தனா்.


பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் கடத்தியதாக மூன்று மாட்டு வண்டிகளை போலீசாா் பறிமுதல் செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டம் பெரியபாளையம் அருகே அமைந்துள்ள அரிபாக்கம் கிராமத்தில் ஆரணி ஆற்றில் நள்ளிரவில் மணல் கடத்தபடுவதாக கிராமத்தினா் புகாா் கூறினா். இதனையடுத்து பெரியபாளையம் உதவி ஆய்வாளா் நரசிம்மன் தலைமையில் போலீசாா் வெள்ளிக்கிழமை இரவு வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது ஆரணி ஆற்றில் மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகளை மடக்கிப் பிடித்தனா். மாட்டு வண்டியை ஓட்டி வந்தவா்கள் தப்பி ஓடிவிட்டனா். பெரியபாளையம் காவல் நிலையத்துக்கு மாட்டு வண்டிகள் கொண்டு செல்லப்பட்டன. , மாடுகள் கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...