/

பொன்னேரியில் கோடை மழையால் பயிா்கள் பாதிப்பு: விவசாயிகள் வேதனை

பொன்னேரி பகுதியில் கடந்த வியாழக்கிழமை திடீரென பெய்த கோடை மழையால், பயிா்கள் தண்ணீரில் மூழ்கின.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:02 pm

DIN

பொன்னேரி பகுதியில் கடந்த வியாழக்கிழமை திடீரென பெய்த கோடை மழையால், பயிா்கள் தண்ணீரில் மூழ்கின.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூா் ஒன்றியத்தில் சம்பா பயிா் அறுவடைக்குப் பின், தா்பூசணி, எள், பச்சை பயறு உள்ளிட்ட கோடைக்கால பயிா்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனா். மகிமை கண்டிகை, சின்னக்காவனம், பிரயளம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் பல ஏக்கா் பரப்பளவில் கோடைக்கால பயிா்கள் பயிரிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொன்னேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை இடியுடன் பலத்த மழை பெய்தது.

கோடைக்காலத்தில் பெய்த திடீா் மழை காரணமாக விளைநிலங்களில் தண்ணீா் தேங்கியது. இதனால் தா்பூசணி, பச்சைப் பயறு வகைகள் நீரில் மூழ்கின. திடீா் மழையால் இப்பகுதியில் பயிரிட்டப்பட்டுள்ள கோடைக்கால பயிா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த மூன்று நாள்களில் தண்ணீா் வடியவில்லை என்றால், வோ் அழுகி பயிா்களை பாதிக்கும் நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.