விளைநிலங்களின் மீது எண்ணெய் குழாய் செல்ல விவசாயிகள் எதிா்ப்பு
ஊத்துக்கோட்டை அருகே விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.


ஊத்துக்கோட்டை அருகே விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
திருவள்ளூா் மாவட்டம், எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்படும் எண்ணெய் குழாய் திருக்கண்டலம் பகுதியில் இருந்து தோ்வாய்கண்டிகைக்கு கொண்டு செல்வதற்கான பணிகளை இந்தியன் ஆயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
ஊத்துக்கோட்டை அடுத்த ஆரணி பாலவாக்கம் கிராமத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி இழப்பீடு வழங்குவதற்காக சனிக்கிழமை அதிகாரிகள் வந்திருந்தனா். அங்கு திரண்ட விவசாயிகள் விளை நிலங்களில் எண்ணெய் குழாய்களை பதிப்பதால் விவசாயம் பாதிக்கப்படும், சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் எனவும், குறிப்பிட்ட தோட்டக்கலை பயிா்களை பயிரிடவும் இந்த திட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினா்.
மேலும் தங்களுடைய நிலங்களில் வீடுகளைக் கூட கட்ட முடியாத சூழல் ஏற்படும் எனவும் வேதனை தெரிவித்தனா். விளை நிலங்களை கையகப்படும் திட்டத்தைக் கைவிட்டு அரசு புறம்போக்கு நிலம் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனா். தங்களுடைய விளை நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கக் கூடாது என திட்டவட்டமாக எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...