திருவள்ளூரில் தேசிய கொடியேற்றி ஆட்சியர் அணிவகுப்பு மரியாதை ஏற்பு

திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியேற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையும் ஏற்றார்.
திருவள்ளூரில் தேசிய கொடியேற்றி ஆட்சியர் அணிவகுப்பு மரியாதை ஏற்பு
திருவள்ளூரில் தேசிய கொடியேற்றி ஆட்சியர் அணிவகுப்பு மரியாதை ஏற்பு

திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியேற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையும் ஏற்றார்.

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதான வளாகத்தில் 75ஆவது சுதந்திர தினவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்து விளையாட்டு மைதானத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து, மூவர்ண பலூன்கள் வெண் புறாக்களையும் பறக்க விட்டார்.

பின்னர், திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி காவல் துறையின் அணிவகுப்பை பார்வையிட்டு, மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, முன்னாள் படை வீரர்கள் நலத்துறை சார்பில் ஒருவருக்கு ரூ.25 ஆயிரமும், வேளாண்மை துறை சார்பில் 3 பேருக்கு 44,267 ரூபாயும் வழங்கினார்.

மீன்வளத்துறை மூலம் ஒருவருக்கு ரூ.30 ஆயிரமும், திருவள்ளூர் மாவட்ட தொழில் மையம் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான கடன் உதவி திட்டம் மூலம் 4 பேருக்கு ரூ.12.31 லட்சமும் வழங்கப்பட்டது. வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மூலம் 5 பேருக்கு ரூ 4.48 லட்சமும், அதே துறை மூலம் கடன் உதவியாக ஒருவருக்கு ரூ.5 லட்சமும், புதிய தொழில் முனைவோர் 2 பேருக்கு ரூ.6.86 கோடியும் வழங்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 2 பேருக்கு ரூ.8760, விலையில்லா தையல் இயந்திரம், 7பேருக்கு ரூ.24355 விலையில்லா சலவைப் பெட்டிகள், தாட்கோ மூலம் ரூ.9.27 லட்த்தில் கடனுதவி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 2 பேருக்கு 11830 மதிப்பிலான மூன்று சக்கர வாகனங்கள் என மொத்தம் 30 பேருக்கு ரூ.7 கோடியே 19 லட்சத்து 40 ஆயிரத்து 312 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் சிறப்பாக பணிபுரிந்த 120 பேருக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.
 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, ஊராட்சி வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ச.வித்யா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com