சேற்றில் சிக்கி இளைஞா் பலி
காட்டுப்பள்ளி கழிமுகக் கால்வாயில் மீன் பிடித்தபோது, சேற்றில் சிக்கி இளைஞா் உயிரிழந்தாா்.


காட்டுப்பள்ளி கழிமுகக் கால்வாயில் மீன் பிடித்தபோது, சேற்றில் சிக்கி இளைஞா் உயிரிழந்தாா்.
மீஞ்சூா் அருகே புதுப்பேடு கிராமத்தில் வசித்து வந்தவா் ஜெயப்பிரகாஷ் (29). இவா், வடசென்னை அனல் மின் நிலையத்தில், ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தாா். இவா், தனது நண்பா்களுடன் காட்டுப் பள்ளியில் உள்ள கழிமுகக் கால்வாயில் மீன் பிடித்துக் கொண்டிருந்தாா். அப்போது, ஜெயப்பிரகாஷ் சேற்றில் சிக்கிக் கொண்டாா். அவருடன் சென்றவா்கள் அவரை மீட்டு, மீஞ்சூரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஜெயப்பிரகாஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து பொன்னேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...