திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் இலவச சேவை முகாம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  திமுக தலைவராக பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்று நான்காம் ஆண்டை  தொடங்குவதை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில்கும்மிடிப்பூண்டி அ
திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் இலவச சேவை முகாம்
திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் இலவச சேவை முகாம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  திமுக தலைவராக பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்று நான்காம் ஆண்டை  தொடங்குவதை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில்கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன நத்தம் கிராமத்தில் இலவச இ-சேவை முகாம் நடைபெற்றது. 

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் இலவச இ சேவை முகாமை நடத்தி வருகின்றனர்.

இதுவரை 3முகாம்களை நடத்தியவர்கள், திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற 3ஆம் ஆண்டு நிறைவு பெற்று 4ஆம் ஆண்டு துவங்கியதன் நினைவாக கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன நத்தம் கிராமத்தில் இலவச இ சேவை முகாமினை நடத்தினார்கள்.

இந்த முகாமிற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் அரவிந்த் வெங்கடாசலபதி தலைமை தாங்கினார்.


 மாவட்ட துணை அமைப்பாளர் சீனு என்கிற சுரேஷ்,  சேகர், ரமேஷ்  ,ஊராட்சி தலைவர் கலைமதி சங்கர், பழ வை சரவணன், நாராயணன் முன்னிலை வகித்தனர்.  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சரத் வரவேற்றார்.

தொடர்ந்து நிகழ்வில் திரளான பொதுமக்கள் பங்கேற்று சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், முதியோர் உதவி தொகை, விதவை உதவி தொகை, மாற்று திறனாளி உதவி தொகை, தமிழக அரசின் இலவச வீட்டுமனை பட்டா, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு திருத்தம், கலைஞர் காப்பீடு திட்ட அட்டை வேண்டி மனு, வாக்காளர் அடையாள அட்டை வேண்டி மனு, முதல் பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்டவைகள் குறித்து இணைய வழியில் மனு அளித்தனர்.

இந்த முகாமில்82 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மூலம் அனைத்து மனுக்களும் உரிய தீர்வு காணப்பட்டு, உரிய ஆவணங்கள் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் மூலம் பயனாளிகளுக்கு விரைவில் வழங்கப்படும் என நிகழ்வின் போது திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்துட்ப துறை அமைப்பாளர் அரவிந்தன் வெங்கடாசலபதி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com