ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

'பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம்தான்': கனிமொழி எம்.பி. பேச்சு

இந்தியாவிலேயே தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர். வேலை வாய்ப்பு மற்றும் இடஓதுக்கீட்டில் பெண்களுக்கு அதிகளவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

News image
கனிமொழி எம்.பி.
Updated On :14 செப்டம்பர் 2021, 11:45 am

DIN

திருத்தணி: இந்தியாவிலேயே தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர். வேலை வாய்ப்பு மற்றும் இடஓதுக்கீட்டில் பெண்களுக்கு அதிகளவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் என திருத்தணியில் நடந்த நலதிட்ட விழாவில் கனிமொழி எம்.பி., பேசினார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் உயர்மின் கோபுர விளக்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று திருத்தணியில் நடந்தது. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். நகர பொறுப்பாளர் வினோத்குமார்  வரவேற்றார். மகளிர் அணி நிர்வாகிகள் சின்னபாப்பா ,மஞ்சுளாகுமார், காந்திமதி, வசந்தி, புனிதவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை குழு துணைத் தலைவர் கனிமொழிகருணாநிதி பங்கேற்று திருத்தணி பெரியார் நகரில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் அமைத்த உயர்மின் மின்கோபுரம் திறந்து வைத்தார். பின் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கனிமொழி எம்.பி., பேசியதாவது:

இந்தியாவிலேயே  தமிழகத்தில் தான் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றனர். நமது முதல்வர் ஸ்டாலின் எம்.எல்.ஏ.,களுக்கு தொகுதி மேம்பாடு நிதி ஒதுக்கீடு செய்து, தொகுதி மக்களின் அடிப்படை பணிகள் செய்து கொள்ள  3 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்,

ஆனால் ஒன்றிய அரசாங்கம் கொரோனா தொற்று  காரணமாக, எம்.பி.,களுக்கு வழங்கும் நிதியை நிறுத்தி உள்ளது.

இந்த ஒன்றிய அரசானது பெண்களின் மாநில உரிமைகளை பறித்து வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான சட்டம், நீட் தேர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். 
சுற்றுசூழல் அதிகம் பாதிக்கப்படும் போது இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.

ஒரு நல்ல ஆட்சி நடைபெற்றால் மட்டுமே பெண்களால் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் இருக்க முடியும்.
கலைஞர் ஆட்சிக்காலத்தில் தான் பெண்களுக்கு கல்வி சுய உதவி குழுக்கள் உள்ளாட்சியில், 33 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு நிறைவேற்றப்பட்டன.

ஒன்றிய அரசு இரண்டு முறை ஆட்சிக்கு வந்தும் இதுவரை பெண்களுக்கான இட ஒதிக்கீடு அதிகம் பெறுவதற்கான சட்டத்தை நிறைவேற்றவிலை.

பெண்கள் முன்னேற்றத்துக்காக திமுக தவிர எந்த கட்சியும் செயல்படுத்தவில்லை தற்போது தமிழக முதல்வர் அவர்கள் கிராமப்புற பெண்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளார்.

இதன் காரணமாக ஆண்கள் வீட்டிலிருந்தபடியே பெண்களை வேலைக்கு அனுப்பி வருகின்றனர். என்றார் அவர். நிகழ்ச்சியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம் பூபதி சட்டமன்ற உறுப்பினர்கள் திருத்தணி எஸ் சந்திரன் திருவள்ளூர் விஜி ராஜேந்திரன் உள்பட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் செல்வி நன்றியுரை கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.